Thursday, August 5, 2021

புறநானூறு - 182. பிறர்க்கென முயலுநர்!

சங்கஇலக்கியங்கள் 

எட்டுத்தொகை 

புறநானூறு 

பாடல் எண் : 182 பிறர்க்கென முயலுநர் 

பாடியவர் : கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

                        
                                    
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே


பொருள்:
உலகம் வாழ்கிறது எதனால் என்று தெரிந்துகொள்வோம். தனக்கென முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை உடையவர் உலகில் வாழ்வதால்தான். அவர்கள் இந்திர உலகத்து அமிழ்தமே கிடைத்தாலும் ‘ஆ ஆ இனிது’ என்று எண்ணி தான்மட்டும் உண்ணமாட்டார்கள். உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ளமாட்டார்கள். பிறர் அஞ்சி ஒதுங்கும் நற்பணிகளைச் செய்யும்போது தயங்கமாட்டார்கள். புகழ் வரும் என்றால் அதனைப் பெறத் தன் உயிரையும் கொடுப்பர். பழி வரும் என்றால் உலகையே சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அயராமல் உழைத்துக்கொண்டே இருப்பர். இத்தகையர் வாழ்வதால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
 

Tuesday, July 20, 2021

                                            இலக்கியங்கள்

1. எட்டுத்தொகை

கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள்.

இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.

எட்டுத்தொகை நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.


இவ்வெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1.அகப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

ஆகிய ஆறு நூல்களும்,

2.புறப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

ஆகிய மூன்றும்,

3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

ஆகிய ஒன்றும் அடங்கும்.

எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் ஏறத்தாழ ஐந்நூற்றுவர். இதில் பெண்பாற் புலவர்களும் அடக்கம், இவர்கள் பல ஊர்களில் வாழ்ந்தவர்கள். பல்வேறு காலத்தவர்கள். பல்வேறு பிரிவினர்கள். இவர்களுடைய பாடல்களில் பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்புகளையும், போர்த்திறமையையும் விவரித்துக் கூறும் பாக்கள் பல; போரைத் தடுத்து அறிவு புகட்டுவன சில; வள்ளல் தன்மையை பாராட்டுவன பல; வருமையின் கொடுமையினை வருணிப்பன சில; மாண்பதை வாழ வழிகாட்டுவன பல; ஆணும் பெண்ணும் மனம் இணைந்து ஒழுகும் அன்பொழுக்கங்களை எடுத்துரைப்பன சில; வரலாற்றுக் குறிப்பினையும் புராண இதிகாச செய்திகளை குறிப்பிடுவன சில, பொதுவாக பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை இதன் மூலமாக அறிகின்றோம்.

2.  பத்துப்பாட்டு

3. பதினெண் கீழ்க்கணக்கு

4.  பன்னிரு திருமுறை